Thursday, 28 September 2017

முக்கனி சுவை சுவைப்போம்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் 
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் 
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் 
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
 காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
 கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
 சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
 சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

Wednesday, 27 September 2017

தனிஅருள்நெறி துவக்கம் கருங்குழி

நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

புலால் உணவு தவிர்தல்

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் 
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.

தந்தை சொல் மந்திரம்

வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒருக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.

பேராசையினால் வரும் விளைவு

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே 
 பகராத வன்மொழி பகருகின் றீரே
 நண்ணாத தீயின நண்ணுகின் றீரே
 நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
 கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
 கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
 எண்ணாத தெண்ணவும் நேரும்ஒர் காலம்
 எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
 திருச்சிற்றம்பலம்

அறியாமை நீக்கிடும் ஒளி

அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் 
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
 மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
 இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.

திருஅருள்உதயம் மருதூர்

என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் 
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் 
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங் கிலையே.

Sunday, 17 September 2017

நன்நெறிகட்டுரைகள்

நன்நெறிவிடியோ

வடலூர் தரிசனம் வாழ்வை வளமாக்கும்

சிவயோக நிலை (கதவைத் திறந்தல்) திருஅருட்பா

கருணை உத்தமர் கடவுளானார் 

மனிதபிறவியின் செயலும் பயனும்

சத்தியஞானசபை தரிசிப்போம்.

தெளிவான வழிப்பாடு தெய்வமாக்கும்.

பசிபிணி நீக்கம் கடவுளை காட்டும்.

முக்கனி சுவை சுவைப்போம்.

தனிஅருள்நெறி துவக்கம் கருங்குழி
புலால் உணவு தவிர்தல்
தந்தை சொல் மந்திரம்
பேராசையினால் வரும் விளைவு
அறியாமை நீக்கிடும் ஒளி
திருஅருள்உதயம் மருதூர்

 

 

 

 

 

 

 

 

பொன்மொழிகள்