Friday, 18 January 2019

வடலூர் தரிசனம் வாழ்வை வளமாக்கும்


148-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம்

தை -07 (21-01-2019) திங்கட்கிழமை தைப்பூச ஜோதி தரிசன நேரங்கள்:
     ====================================================
காலை 6.00, 10.00 மதியம் 1.00 இரவு 7.00, 10.00 மறுநாள் காலை 5.30
ஆக ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்.

தை- 09 (23-01-2019) புதன்கிழமை - சித்திவளாகத் திருஅறை தரிசனம்
     ===========================================
பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை

Friday, 28 December 2018

சிவயோக நிலை (கதவைத் திறந்தல்) திருஅருட்பா




  ஆறாம் திருமுறை / சிவயோக நிலை
    திருச்சிற்றம்பலம்


    1. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
    பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
    நவநேய மாக்கும் நடராஜ னேயெஞ்
    சிவனே கதவைத் திற.

    2. இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே
    நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே
    கோவே எனது குருவே எனையாண்ட
    தேவே கதவைத் திற.

    3. சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
    நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
    பவனே பரனே பராபரனே எங்கள்
    சிவனே கதவைத் திற.

    4. அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி
    மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந்
    தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
    சிவனே கதவைத் திற.

    5. வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற
    ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத்
    திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா
    சிறப்பா கதவைத் திற.

    6. எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல்
    நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு
    நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு
    செல்வா கதவைத் திற.

    7. ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம்
    வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க
    ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா
    தேவா கதவைத் திற.

    8. ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே
    ஞான அமுதமது நானருந்த - ஞான
    உருவே உணர்வே ஒளியே வெளியே
    திருவே கதவைத் திற.

    9. திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே
    வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது
    வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில்
    தேனே கதவைத் திற.

    10. சோதிமலை மேல்வீட்டில் தூய திருவமுதம்
    மேதினிமேல் நானுண்ண வேண்டினேன் - ஓதரிய
    ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
    தேகா கதவைத் திற.

Sunday, 19 November 2017

கருணை உத்தமர் கடவுளானார்

எல்லாக் குறையும் தவிர்த்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி 
நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் 
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.

Monday, 13 November 2017

மனிதபிறவியின் செயலும் பயனும்

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேனே மாலையும்ஏற் றருளே.