Sunday, 19 November 2017

கருணை உத்தமர் கடவுளானார்

எல்லாக் குறையும் தவிர்த்தேன்உன் இன்னருள் எய்தினன்நான்
வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்தருந்தி 
நல்லார் எவர்க்கும் உபகரிப் பான்இங்கு நண்ணுகின்றேன் 
கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே.

Monday, 13 November 2017

மனிதபிறவியின் செயலும் பயனும்

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே
களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே
சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்
மாநடத்தென் அரசேனே மாலையும்ஏற் றருளே.

Tuesday, 24 October 2017

சத்தியஞானசபை தரிசிப்போம்.

இன்று தொடங்கியிங்கே எம்பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடப்புரிவான் - என்றுமென்சொல்
சத்தியம்என் றெண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
நித்தியம்பெற் றுய்யலாம் நீர்.

Tuesday, 17 October 2017

தெளிவான வழிப்பாடு தெய்வமாக்கும்.

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
திருச்சிற்றம்பலம்

Monday, 9 October 2017

பசிபிணி நீக்கம் கடவுளை காட்டும்.

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்
 வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் 
பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்
 பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர் 
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் 
பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் 
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர் 
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

Thursday, 28 September 2017

முக்கனி சுவை சுவைப்போம்.

தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் 
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம் 
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம் 
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
 காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
 கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
 சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
 சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

Wednesday, 27 September 2017

தனிஅருள்நெறி துவக்கம் கருங்குழி

நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே.

புலால் உணவு தவிர்தல்

துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் 
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.

தந்தை சொல் மந்திரம்

வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒருக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.

பேராசையினால் வரும் விளைவு

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே 
 பகராத வன்மொழி பகருகின் றீரே
 நண்ணாத தீயின நண்ணுகின் றீரே
 நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
 கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
 கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
 எண்ணாத தெண்ணவும் நேரும்ஒர் காலம்
 எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.
 திருச்சிற்றம்பலம்

அறியாமை நீக்கிடும் ஒளி

அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப் 
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
 மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
 இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே.

திருஅருள்உதயம் மருதூர்

என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் 
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் 
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங் கிலையே.

Sunday, 17 September 2017

நன்நெறிகட்டுரைகள்

நன்நெறிவிடியோ

வடலூர் தரிசனம் வாழ்வை வளமாக்கும்

சிவயோக நிலை (கதவைத் திறந்தல்) திருஅருட்பா

கருணை உத்தமர் கடவுளானார் 

மனிதபிறவியின் செயலும் பயனும்

சத்தியஞானசபை தரிசிப்போம்.

தெளிவான வழிப்பாடு தெய்வமாக்கும்.

பசிபிணி நீக்கம் கடவுளை காட்டும்.

முக்கனி சுவை சுவைப்போம்.

தனிஅருள்நெறி துவக்கம் கருங்குழி
புலால் உணவு தவிர்தல்
தந்தை சொல் மந்திரம்
பேராசையினால் வரும் விளைவு
அறியாமை நீக்கிடும் ஒளி
திருஅருள்உதயம் மருதூர்

 

 

 

 

 

 

 

 

பொன்மொழிகள்

Thursday, 17 August 2017

திருஅருட்பாவில் உணர்ந்து கொண்ட வரைப்பட நெறிகள்...



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  மனிததேகம் மாத்திரமே முதல் சிருஷ்டி தொடங்கி கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகம் ஆகும். இந்ததேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள்விளக்கமும் மிகவும் விளங்குகின்றது.

 எனவே, இம்மனிததேகத்தை நன்கு பயன்படுத்தி ஒழுக்கம் நிரம்பிக், கருணையே வடிவாக ஜீவகாருணியநெறியில் நடந்து பெருங்களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும்  தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வோமாக.

















































வரைப்படம் தொடரும்.........