Tuesday 22 August 2017

சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியும் பயனும்



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

      பிரபஞ்சம் எல்லாம் ஒர் வடிவமாய்க் கொண்டருளிய அட்டமூர்த்திகளும் ருபாருபமாகிய சதாசிவமும் அவர்செய்யும் ஐந்தொழில்களும் சுதந்திர இச்சையால் திருமேனி கொண்ட உருவமாகிய மகேசுரவடிவமும், இவ்வடிவங்களை வழிபடுவோர்க்கு இவரால் கொடுக்கப்படும் பதப்பிரயோசனகளும், இவ்வடிவங்கள் எல்லாம் கடந்து ஆன்மபோதத்தால் சுட்டி அறிதற்கு அரியஅரூபமாகிய பரிபூரணசொரூபமும், சுட்டி அறியும்படி எழுந்தருளிவந்த குரு வடிவமும், வீடு அடையும் நெறியாகக் கூறிய உபாயங்களும், தவத்தில் தோன்றுபவனும், ஆன்ம போதம் ஒழிப்பில் தோன்றும் ஆனந்தமும், அதனை அறிந்து அதனுள் கலந்துவிடும் அத்துவிதமும், இங்ஙனம் கலப்பதற்கு முன் தோன்றும் துவிதமும் ஆகிய இவை அத்தனையும் அருட்பெருஞ்ஜோதியின் அருட்சத்தியால் உண்டாகியதும், அனுபவிப்பதும் ஆகும்.

மேலும் அவர் இயற்கை உண்மையரென்றும் இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும் நித்தியரென்றும் சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதிய ரென்றும், அமலரென்றும், அற்புதரென்றும், நிரதிசயரென்றும், எல்லாமானவரென்றும், எல்லாமுடையவரென்றும், எல்லாம் வல்லவரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப்பதங்களையும் எல்லாச் சத்திகளையும், எல்லாச்சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத்தத்துவங்களையும், எல்லாதத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லாஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும் மற்றெல்லாவற்றையும் தனது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம்வருவித்தல், விளக்கம்செய்வித்தல் முதலிய பெருங்கருணைப் பெரும் தொழில்களை (முதல் காரணமாயும், நிமித்த காரணமாயும், துணைக்காரணமாயும்) இயற்றுவிக்கின்ற அருட்பெருஞ்ஜோதியர் ஒருவாற்றானும் ஒப்புயர்வில்லாத தனிப்பெருங்கருனை நிறைந்தவரை நாம் அனைவரும் சத்திய அறிவால் அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்து சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில்,

காண்பார் காணுமிடம் காணப்படுமிடம்,
அறிவார் அறியுமிடம் அறியப்படுமிடம்,
தூண்டுவார் தூண்டுமிடம் தூண்டப்படுமிடம்,
சுவைப்பார் சுவைக்குமிடம் சுவைக்கப்படுமிடம்,
அனுபவிப்பார் அனுபவிக்குமிடம் அனுபவிக்கப்படுமிடம்,
கருதுவார் கருதுமிடம் கருதப்படுமிடம்,
முகருவார் முகருமிடம் முகரப்படுமிடம்,
கேட்பார் கேட்குமிடம் கேட்கப்படுமிடம் முதலியவாய் விளங்குகின்றார் நம்அருட்பெஞ்ஜோதி ஆண்டவர்.

மேலும் நாம் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப்பேரறிவை அறிவித்தும், நாம் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருங்காட்சிகளைக் காட்டுவித்தும், நாம் எவ்விதத்தும் செய்தற்கரிய உண்மைப் பெருஞ்செயல்களை செய்வித்தும், நாம் எவ்விதத்தும் அடைதற்கரிய உண்மைப் பெரும்நன்மைகளை அடைவித்தும், நாம் எவ்விதத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவித்தும், மேலும் எல்லாத் தத்துவங்களையும் எல்லாத்தத்துவிகளையும் தோற்றுவித்தலும், மயக்குவித்தலும், தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதில் கொடுத்தற்குரிய பூரண ஞான சுகானுபவ  சொரூப சாத்தியர்களாய் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் தடைபடாதநித்திய சுத்த பிரணவ ஞானதேகங்களைப் பெற்று பூதசித்தி, கரணசித்தி, இந்திரியசித்தி குணசித்தி, பிரகிருதிசித்தி, காலசித்தி கலாசித்தி. விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி, சிவசித்திமுதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்டசித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவிசித்தி, அடிநிலைக்கரும ஞானசித்தி, முடிநிலை கருமஞாணசித்தி, அடிநிலை யோக ஞானசித்தி, முடிநிலை யோகஞானசித்தி அடிநிலைத் தத்துவ ஞானசித்தி, முடிநிலைதத்துவ ஞானசித்தி, அடிநிலை ஆன்மஞானசித்தி, முடிநிலை ஆன்ம ஞானசித்தி, சுத்த ஞானசித்தி சமரச சுத்த ஞானசித்தி முதலிய சித்திகளை எல்லாம் பெற்று இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெரு வாழ்வில் வாழவே மிக உயரறிவுடைய இம்மனிததேகத்தில் செலுத்தியருளியுள்ளார் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மிகமிகப்பெருங்கருணை நிறைந்து விளங்குகின்ற ஒருவர் ஆகிய கடவுளை நாம் அனைவரும் அறிந்து அன்புசெய்து அருளை அடைந்து அழிவில்லாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ்வோம்மாக.

இவைகளை பெறுவதற்கு தடைகளான பலவேறுகற்பனைகள், பலவேறு சமயங்கள், பலவேறு மதங்கள், பலவேறு மார்க்கங்கள், பலவேறு லட்சியங்கள் கொண்டு பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் கடந்து, 

உலகியற்கண் பொன்விஷயஇச்சை,
பெண்விஷயஇச்சை,
மண்விஷய இச்சை,
முதலிய எவ்விஷய இச்சைகளிலும் அருள்நெறிக்கு புறம்பாக செல்லாது நம்அறிவை ஒர்அணுத்துணையும் பற்றுவிக்காமல் உண்மையறிவு, உண்மைஅன்பு, உண்மையிரக்கம், நல்ஒழுக்கம், அடக்கம், பணிவு, பொறுமை, வாய்மை தூய்மை, புறங்கூறாமை, பொய்சொல்லாமை, கொட்சொல்லாமை, உண்மை உரைத்தல், இன்சொல்லாடல், திரிகரண அடக்கம், கடவுள் பக்தி, நன்மை உண்டாக நினைத்தல், பொறாமை அடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய்யாகவும் சகோதரியாகவும் சிந்தித்தல், மேலும் திருஅருட்பா, திருவாசகம், திருமந்திரம் முதலிய ஞான நூல்களை தோத்திரம் செய்தல், அன்னியர்களுக்குத் தீங்குசெய்யாது நன்மை உண்டகும்படி நடத்தல், எக்காரணத்துக்கொண்டும் பாவ காரியங்களை எப்போழுதும் செய்யக்கூடாது என்ற உறுதியும் வைராக்கியமும் கொண்டு பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமல், திருவருளேதுணையாக கொண்டு,

இந்திரிய ஓழுக்கங்களான, கொடிய வார்த்தை முதலியவை நாடாமலும் செவிபுகாமலும் நிற்றல், நாதம் முதலிய ஸ்தோத்தரங்களை அதிசயிக்காமல் உற்றுக்கேட்டல், மற்றவைகளைக் கேளாதிருத்தல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமானவற்றைக் கேளாதிருத்தல், பாராதிருத்தல், ருசியின் மேல் விருப்பமில்லாதிருத்தல், சுகந்தம் விருப்பமில்லாமல் அனுபவித்தல், இனிய வார்த்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவர்களுக்கு இம்சை நேரிடும் காலத்தில் அதை எந்தவிதத்  தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடத்திற்குச் செல்லுதல், உயிர்களுக்கு உபகார நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்களுக்கு மனத்தாலும், வாக்காலும், சரீரத்தாலும், தனத்தாலும் தன்சத்தியின்அளவு மீறாமலும் உபகரித்தல், மல ஜலாதி உபாதி அடக்காமலும், முழுமையாகவும் நீக்குதல்; மேலும்,  
கரண ஓழுக்கங்களான, உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளல், சிற்சபையின்கண் மனஞ்செல்லுவது தவிர, வேறு எந்தவகை ஆபாசத்திலும் செல்லாமல் அதை இழுத்து மேற்குறித்த இடத்தில், அதாவது. கடவுளிடத்தில் நிறுத்துவது, பிறர்குற்றம் விசாரியாது இருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக்குணங்கள் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாக நிற்றல், பிறர்மேல் கோபியாது இருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்கள் நெறிதவற முற்படும்போது தடுத்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல்; மேலும்,

ஜீவ ஓழுக்கங்களான, எல்லா மனிதரிடத்தும் (ஆண் பெண் அலி) ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், கோத்திரம், சூத்திரம், குலம், சாத்திரம், தேசம், உயர்வு, தாழ்வு, முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல்; மேலும்,

ஆன்ம ஓழுக்கங்களான எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமுள்ள ஜீவர்களிடத்திலும் இரக்கம்வைத்து, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல்; மேலும்,

இடம் தனித்திருத்தல்,
இச்சை இன்றி நுகர்தல்,
ஜெப - தபம் செய்தல்,
தெய்வம் பராவல்,
பிறஉயிர்க்கு இரங்கல்,
பெருங்குணம் பற்றல்,
பாடி பணிதல்,
பக்தி செய்திருத்தல்,

காலம்தாழ்த்தாது எல்லா உயிரையும் தன் உயிராக கருதி அவ்வுயிரின் துன்பத்தை சிந்தையாலும், பேச்சாலும், தேகத்தாலும், திரவித்தாலும் உபகாரம் செய்தல் முதலிய நற்செய்கைகள் பழகி பழகி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும், அவரின் திருவருளை பெற்றுதரும் திருமந்திரமான,

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்னும் மகாமந்திரத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்போம்மாக, எப்படிஎனில் உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்ணீர்கொண்டு பரவசத்துடன் இறைவனை இப்பிறவியிலே தரிசிக்கப் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் கருணைநன்முயற்சிக் கொண்டு வைராக்கியத்தோடு சமரச சுத்த சன்மார்க்கத் சத்திய தனிநெறி ஒன்றையே நமது உரிமை எனக்கொண்டு ஒருசிறிதும் அஞ்சாது அருட்பெருஞ்ஜோதியேதுணை எனகருதி சாகா கல்விப் பயிற்சியை (மரணமில்லாபெருவாழ்வை) அடைய இவ்ஒழுக்கநெறிகளை செயல்பாட்டில் கடைபிடித்து பெரும்நன்மை அடைய பயில்வோமாக.

எல்லா நன்மையும் நம் இறைவர்தருவார்நமக்கு.
திருச்சிற்றம்பலம்.

Thursday 17 August 2017

திருஅருட்பாவில் உணர்ந்து கொண்ட வரைப்பட நெறிகள்...



எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  மனிததேகம் மாத்திரமே முதல் சிருஷ்டி தொடங்கி கடவுள் சம்மதத்தால் சிருஷ்டிக்கப்பட்ட உயர்ந்த அறிவையுடைய தேகம் ஆகும். இந்ததேகத்தில் ஆன்ம விளக்கமும் அருள்விளக்கமும் மிகவும் விளங்குகின்றது.

 எனவே, இம்மனிததேகத்தை நன்கு பயன்படுத்தி ஒழுக்கம் நிரம்பிக், கருணையே வடிவாக ஜீவகாருணியநெறியில் நடந்து பெருங்களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும்  தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வோமாக.

















































வரைப்படம் தொடரும்.........