Monday 11 September 2017

மனித வாழ்வை சிறப்பாக்குவோம்

 அருட்பெருஞ்ஜோதி துணை
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
      நாம் எதோ சிற்றின்பமான  வாழ்க்கை வாழ்ந்து விட்டு இறந்துவிடவா இந்த விலை மதிப்பு இல்லா மனிததேகம் இறைவனின் கருணையினால் அருளப்பட்டு இருக்கும்?

இல்லை, இல்லவேஇல்லை, நம்உலகில் உள்ள எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து மற்றவர்களின் சந்தோசத்தில்தான் சந்தோசம் கண்டு ஆனந்தத்துடன் அமைதி நிறைந்து நீதியுடன் கருணையுடன் ஒழுக்கமே உயிராய் வாழ்ந்து  இறைவனின்அன்பு பெற்று இறைவன்மயம்மாகி பேரானந்தத்தில் வாழவே இம்மனிததேகம் கடவுள்அருளால் கிடைக்கப்பட்டுள்ளது.

நாம் இப்படியா வாழ்கின்றோம்?

 இல்லை, அயோபாவம் ஒழுக்கம், கருணையற்று, சுயநலம் நிறைந்து, அறத்துக்கு புறப்பான மிகமிக மட்டமான துர்குணங்களை நிறைப்பி பல உயிர்களுக்கு துன்பமே விளைவிக்கும் படுகேவலமான செயல்கள் செய்து பாவங்களை பெருக்கி வாழ்கின்றோம் (வேண்டாம்  ஆபத்தும், துன்பமும், வினையும் தரும் சிறுமைவாழ்க்கை )
இதற்கு தெளிவு?

சாதாரணமான 3 அறிவு உள்ள தேன்ஈ பாருங்கள் எவ்வளவு ஆழகாக ஆயிரம் ஆயிரம் கணக்கில் ஒற்றுமையுடன் அதற்க்கு இருக்கும் வேலையினை ஒழுக்காக செய்து சுறுசுறுப்புடன் சந்தோசத்துடன் உணவினை பகிர்ந்து உண்பதை, (என்னஅற்புதம்.)

உயர்ந்த 6 அறிவு இருந்தும் சுயநலமனிதனாகி அதன் உணவினைஉண்ண அதன் உயிரை அழித்து அபகரிக்கும் தவறான செயலையும் ஒப்பிட்டுபாருங்கள், யார் உயர்ந்த நிலையில் இருக்கின்றோம் என்று, ஆறுஅறிவுஆன நாமா? அல்லது, 3 அறிவு உள்ள தனக்கு கடவுள் கொடுத்த ஆற்றலுடன் சந்தோசமாக வாழும் தேன்ஈயா?

எனவே, நாம் இதை புரிந்தாவது, இன்று முதல் ஒழுக்கநிரம்பிக் போது நலத்துடன் வாழ்வோம். இந்தநெறியில் வாழ்ந்தால் நம் உரிமை நாயகன் அருட்பெருஞ்ஜோதியின் அருளைப்பெற்று எல்லா இன்பமும் அடைந்து பின் இறைவன் மயம்மாகிட முடியும் என்ற லட்சியத்தில் வாழ்வோம்.

                                             எல்லா நன்மையும் இறைவன் தருவர்
                                                                 திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. விழிப்புணர்வு ஏற்படுத்தும் அருமையான கட்டுரை.

    ReplyDelete